வாகன உரிமையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! - THAMILKINGDOM வாகன உரிமையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! - THAMILKINGDOM
 • Latest News

  வாகன உரிமையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

  கொவிட் 19 பரவல் நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன திணைக்களம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
   
  புதிய விதிமுறைக்கு அமைய குறித்த திணைக்களம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

  இதற்கமைய எதிர்வுரும் 19 ஆம் திகதி முதல் குறித்த திணைக்களம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், தொலைபேசி வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்யும் முறைக்கமைய ஒரு நாள் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். 

  இது தொடர்பில் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடப்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

  01. வாகனப்பதிவுகளுக்கு 0706354116, 0706354117, 0706354118 
  02. வாகன உரிமங்களுக்காக 0706354115, 0706354137, 0706354138, 0706354139, 0706354140, 0706354141 
  03. வாகன இலக்க தகடு தொடர்பில் 0706354119, 0706354120 
  04. ஏனைய விடயங்களுக்கு 0706354145, 0706354146, 0706354147,0706354148, 0706354149
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வாகன உரிமையாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top