Breaking News

உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவனுக்கு கொரோனா!

இந்த முறை உயர்தர பரீட்சை எழுதும் திவுலப்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. 

நுடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் இவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக திவுலப்பிட்டிய பொது சுகாதார அதிகாரி எம்.குலதிலக்க தெரிவித்தார்.  

அந்த மாணவனின் உறவினர் ஒருவர் ஏற்கனவே கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்.  

இதற்கமைய இந்த மாணவனுடன் பரீட்சை எழுதும் 20 மாணவர்களை இரண்டு பிரிவாக பிரித்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.  

ஆந்த மாணவன் தற்போது இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு பரீட்சை எழுத சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.  

இதேவேளை பிலியந்தலை மடபாத பகுதியை சேர்ந்த விஹாரை ஒன்றின் பிக்குகள் 75 பேரும் ஏனைய 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

அங்குள்ள பிக்கு ஒருவரின் தாயாருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்தே பிக்குகள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  
குறித்த பெண் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தொழில் புரிபவர் என்பதோடு அவர் அண்மையில் தேரரை சந்திக்க அந்த விஹாரைக்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.