குடும்பம் குட்டியுடன் ஆசையாக வாழ நினைத்தது என் தவறா? மன வருத்தத்துடன் வனிதா (காணொளி) - THAMILKINGDOM குடும்பம் குட்டியுடன் ஆசையாக வாழ நினைத்தது என் தவறா? மன வருத்தத்துடன் வனிதா (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  குடும்பம் குட்டியுடன் ஆசையாக வாழ நினைத்தது என் தவறா? மன வருத்தத்துடன் வனிதா (காணொளி)


  வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணமானது தமிழ் மீடியாக்கள் மற்றும் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட ஒன்று. பல தடைகள் மற்றும் பிரச்சனைகள் கடந்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர் சில நாட்கள் மட்டுமே சந்தோசமாக வாழ கொடுத்து வைத்தனர். கோவாவிற்கு பிறந்தநாளை கொண்டாட சென்ற பீட்டர் பால் வனிதா திடீரென சில பிரச்சனையால் பிரிந்துள்ளது ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதனை தொடர்ந்து வனிதா பீட்டர் பாலை அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டார் என்று வதந்திகள் பலவும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் நடந்த உண்மையை வனிதா விஜயகுமார் அவர்கள் ஒரு காணொளி மூலம் விலக்கியுள்ளார். அதற்கு முன்னரே தனது வருத்தங்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு “எனது வாழ்க்கை எனது முடிவு” என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

  வீடியோவில் ஆரம்பித்திலேயே “இது எனது நல விரும்பிகளுக்காக மட்டும் தன் என்னை வெறுப்பவர் என்னவென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள் அதை பற்றி நான் கண்டுகொள்ளப்போவதில்லை” என்று கூறி ஆரம்பித்த வனிதா. “எங்களுக்குள் கிறிஸ்துவ முறைப்படி நிச்சயதார்த்தம் தான் நடந்தது திருமணம் நடக்கவில்லை அதனால் நாங்கள் இருவரும் கணவர் மனைவி இல்லை! இனி பீட்டர் எலிசபத் தம்பதியினர் இடையில் நான் எந்தவிதமான தொந்தரவும் தரமாட்டேன் அவர்கள் சந்தோசமாக வாழட்டும்!” என வருத்தத்துடன் கூறினார்.

  “அதைத் தவிர்த்து பீட்டருக்கு மனைவி இருப்பது நான் காதலிக்கும் பொழுது தெரியாது! திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு தான் தெரியும், முன்னாடியே தெரிந்திருந்தால் நான் சத்தியமாக காதலித்திருக்க மாட்டேன்! பீட்டர் பாலிற்கு மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இருந்தது அவர் அவைகளுக்கு அடிமையாகியும் விட்டார். பல நாட்கள் வீட்டிற்கு வந்ததும் இல்லை, நான் அவரை எதிர்பார்த்து காத்திருந்த நாட்களும் உண்டு! அவர் நாங்கள் சொல்வதை கேப்பதில்லை அதனால் தான் பிரிந்தோம்! இது என் தவறு தான், நான் பாதியில் வந்தவள் பாதிலேயே போகிறேன்!” என்று அவரது தவறுகளை சுட்டிக் காட்டி தன் உரையை முடித்தார். அவர் பேசிய முழு காணொளி உங்கள் பார்வைக்காக!!
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: குடும்பம் குட்டியுடன் ஆசையாக வாழ நினைத்தது என் தவறா? மன வருத்தத்துடன் வனிதா (காணொளி) Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top