லாஸ்லியாவிடம் பேசினேன்: வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்! (காணொளி) - THAMILKINGDOM லாஸ்லியாவிடம் பேசினேன்: வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்! (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  லாஸ்லியாவிடம் பேசினேன்: வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்! (காணொளி)


  பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் போட்டியாளர் உள்பட ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

  இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் போட்டியாளராக கலந்து கொண்டவர்களின் ஒருவரான வனிதா, இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’நான் லாஸ்லியாவுடன் சற்றுமுன் பேசினேன் என்றும் அவர் அழுது கொண்டு இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறார் என்றும் அவர் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

  மேலும் விஜய் டிவி நிர்வாகம் இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி லாஸ்லியாவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் காலமானதை அடுத்து, தற்போது உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவருடைய உடல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் லாஸ்லியாவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் என்னுடைய அன்பையும் தெரிவித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

  லாஸ்லியாவின் தந்தை இறந்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்று இரவே வெளிவந்தாலும் அதன்பிறகு லாஸ்லியா எங்கே இருக்கிறார்? எப்போது இலங்கை செல்ல இருக்கிறார்? லாஸ்லியா தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவது எப்படி? என்பது குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் வனிதாவின் இந்த அப்டேட் லாஸ்லியா ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: லாஸ்லியாவிடம் பேசினேன்: வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்! (காணொளி) Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top