பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பின்னணி குரல் கொடுப்பவர் இந்த நடிகரா? கமலுக்கே ஆர்டர் போடுறாரே! - THAMILKINGDOM பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பின்னணி குரல் கொடுப்பவர் இந்த நடிகரா? கமலுக்கே ஆர்டர் போடுறாரே! - THAMILKINGDOM

 • Latest News

  பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பின்னணி குரல் கொடுப்பவர் இந்த நடிகரா? கமலுக்கே ஆர்டர் போடுறாரே!


  விஜய் டிவியில் தற்போது நடந்துவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிக் பாஸுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் பிரபல நடிகர் என தெரிய வந்ததை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இவர்தான் கமலஹாசனுக்கு ஆர்டர் போடுகிறாரா எனவும் ஆச்சரியப்படுகின்றனர். 

  விஜய் டிவியில் 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற உள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய சீசன்கள் போல் இந்த சீசனில் சுவாரசியமாக எதுவும் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.  

  ரசிகர்கள் கடுப்பாகும் அளவுக்கு விஜய் டிவி போட்டியாளர்களையே தேர்ந்தெடுத்துள்ளது அனைவரையும் வெறுப்படைய வைத்துள்ளது. மேலும் முக்கால்வாசி விஜய் டிவி பிரபலங்கள் உள்ளே சென்றது ரசிகர்களுக்கு போரடித்து விட்டது போல.  

  இதனால் சீக்கிரம் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூச்சலிடுவது சமூக வலைதளங்களில் காண முடிகிறது.  

  இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் என்பவருக்கு பின்னணி குரல் கொடுப்பவர் பிரபல நடிகர் சதீஷ் சாரதி என்பவர் தானாம். இவரது புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

  இவர் 2014 ஆம் ஆண்டு மஞ்சுநாத் என்ற படத்தில் நடித்திருந்தார். இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய 35 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் இப்பவாவது சுவாரஸ்யமான போட்டிகளை கொடுக்குமாறு பிக்பாஸுக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு பின்னணி குரல் கொடுப்பவர் இந்த நடிகரா? கமலுக்கே ஆர்டர் போடுறாரே! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top