நந்திக்கடலில் மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்! - THAMILKINGDOM நந்திக்கடலில் மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்! - THAMILKINGDOM
 • Latest News

  நந்திக்கடலில் மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்!

   


  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களுக்கு, நந்திக்கடலில் மலர்தூவி இன்று (சனிக்கிழமை) காலை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

  எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடலாகும் என துரைராசா ரவிகரன் கூறியுள்ளார்.

  மேலும், ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  குறித்த  அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நந்திக்கடலில் மலர்தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top