Breaking News

காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

 

 
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

 ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சி.வி விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

 இந்தநிலையிலேயே இன்று நண்பகல் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.