Breaking News

மூளையில் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்குமா ஆப்பிள்?

 


ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விரைவில் விடுபடலாம்.

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் பாதையில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கிறது.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஆப்பிள் பழத்தை கோடைக் காலத்தில் அதிகம் சாப்பிடலாம். அப்பிளில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் படி ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்