Breaking News

ஜனநாயகத்திற்காக போராடும் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்போம் - சஜித்பிரேமதாச !

 


தேர்தலை நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி நேற்று முன்தினம்(26) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நிவிதிகல நிமல் அமரசிறிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச நேற்றையதினம்  (27) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இரங்கல் தெரிவித்தார்.

தனது அரசியல் சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் தொடர்பில் பல்வேறு மாற்று அபிப்பிராயங்கள்காணப்படுகின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்க்கட்சியில் செயற்படும் சகோதர அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னனி நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலை கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த துயரச் செய்தி வெளியானவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மக்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துள்ளமைக்கு எதிராக தாம் வீதியில் இறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிருகத்தனமான,சர்வாதிகார, எதோச்சதிகார அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைக்குஜனாதிபதியும் அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், ஜனநாயகத்தைக் கோரி வீதியில் இறங்கியநிமல் அமரசிறி மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்திகண்டிப்பதாகவும், இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி தேர்தலைக் கோரி மக்கள் நடத்தும் இந்தபோராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஏகமானதாக ஒன்றுபடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் தேர்தலுக்கு பணம் இல்லை எனவும், பணம் வழங்க முடியாது எனவும், பணம்இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினாலும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரத்தை தம்மிடம் பெற்று நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.