ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டு 2014 - THAMILKINGDOM ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டு 2014 - THAMILKINGDOM
 • Latest News

  ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டு 2014

  2014ஆம் ஆண்டானாது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டாக அமைந்ததென ஊடகவியலாளரின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது.


  உலக நாடுகளில் பாகிஸ்தான் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்த நாடாக அமைந்ததெனவும் இந்த ஆண்டில் பாகிஸ்தானில் மாத்திரம் 14 ஊடகவியலாளர் கொல்லப்பட்டதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

  இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள சிரியாவில் 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.உலக நாடுகளில் இவ்வாண்டில் மாத்திரம் 118 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  மோதல்கள் இடம்பெறும் நாடுகளுக்கு செல்லும் ஊடகவியாலளர்கள் எகிப்து போன்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களினால் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதையும் ஊடகவியலாளரின் சர்வதேச சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டு 2014 Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top