பொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது- ஐ.தே.க - THAMILKINGDOM பொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது- ஐ.தே.க - THAMILKINGDOM
 • Latest News

  பொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது- ஐ.தே.க

  தேர்தல் பிரசாரத்துக்காக பொலிவூட் நடிகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரழைத்தமையானது, வெட்கப்பட வேண்டிய செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


  இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தளவு கீழ்நிலை செயற்பாடு குறித்து இலங்கை மக்கள் வெட்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸா டி சில்வா தெரிவித்துள்ளார்.

  இதற்கு பதிலாக அமரதேவ மற்றும் மாலினி பொன்சேகா ஆகியோரை பிரசாரங்களுக்கு பயன்படுத்தியிருக்க முடியும் என்று ஹர்சா சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் குழு ஒன்றின் மீது குருநாகலில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது- ஐ.தே.க Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top