ஈரானிய ராணுவ அதிகாரியை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் - THAMILKINGDOM ஈரானிய ராணுவ அதிகாரியை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் - THAMILKINGDOM
 • Latest News

  ஈரானிய ராணுவ அதிகாரியை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்

  ஈராக்கில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க சென்ற ராணுவ அதிகாரியை ஐ.எஸ்.ஐ.எஸ் சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

  தீவிரவாதிகளை எதிர்க்கும் நோக்கில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் நாடும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் பாக்தாத்துக்கு(Baghdad) அருகே ஈராக் ராணுவ தளத்தில் வீரர்களுக்கு நேற்று காலை ஈரானிய ராணுவ பிரிகேடியர் ஹமீது(Brigadier Hamid) பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.


  அப்போது ராணுவ தளத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஹமீதை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு(Tehran) இவரது சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதன்பின் இன்று காலை ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஈரானிய ராணுவ அதிகாரியை படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top