Breaking News

அமெரிக்கா- கியூபா ஒப்பந்தம் அமெரிக்கா தோல்வி

அமெரிக்காவும் கியூபாவும் தங்களது 55 வருடகால உறவுமுறிவை இந்த வாரம் அறிவிக்கப்பட்ட நல்லெண்ணங்கள் மூலம் புதுப்பித்துக் கொண்டன. இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தூதரங்களைக் கூட அமைக்கின்றன.


உலகின் பல இடங்களிலும் நெருக்கடிகளைச் சந்திக்கும் அமெரிக்கா கியூபாவைத் தொடர்ந்து எதிரியாக வைத்திருக்க விரும்பவில்லை என லங்காசிறி வானொலியில் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

1959ல் கியூபாவிலிருந்த சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்கச் சொத்துக்களை பிடல் கஸ்ரோ கியூபாவின் தேசிய சொத்தாக்கியதிலிருந்து ஆரம்பித்தது இந்த உறவு முறிவு.

1962ல் அமெரிக்காவால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கக் கம்பனிகள் வியாபரம் செய்வதோ அல்லது அமெரிக்கர்கள் செல்வதோ அல்லது கியூபாவிற்குப் பணம் அனுப்புவதோ தடுக்கப்பட்டது.

கனடாவும் புனித பாப்பரசருமே இந்த ஒற்றுமையாக்கும் முயற்சிகளிற்கு துணை நின்றவர்கள். கனடா, அமெரிக்காவும் கியூபாவும் சந்திப்பதற்கான இடவசதிகளைச் செய்து கொடுத்தது. பாப்பரசர் ஒப்பந்தம் தயாராவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த உறவுப் புதுப்பித்தலால் கனடாவிற்கு பொருளாதார ரீதியாக இழப்பு மாத்திரமல்ல, கனடியர்கள் மிகவும் விரும்பிய உல்லாசத்தளமாக இருக்கும் கியூபாவிற்கு செல்வதற்காக அவர்கள் இரட்டடிப்புச் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.