இந்திய மீனவர்கள் விடுதலை
இந்திய மீனவர்கள் 38 பேர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை - இந்தியாவக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்தமை தொடர்பில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் இந்திய மீனவர்கள் 28 பேர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.