Breaking News

100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   


கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல்  நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.   

கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது.   இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.