Breaking News

சார்ளி ஹெப்டோ சஞ்சிகைக்கு எதிராக நைஜரில் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸின் சார்ளி ஹெப்டோ சஞ்சிகைக்கு எதிராக நைஜரில் பாரிய எதிர்பார்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.


குறித்த சஞ்சிகையின் பாரிஸில் உள்ள காரியாலயத்துக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குலுக்கு பின்னர் வெளியாகி இருந்த சார்ளி ஹெப்டோ சஞ்சிகையின் அட்டைப் படத்தில் நபிகள் நாயகத்தின் உயிரோவியம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.இதன்போது ஏற்பட்ட வன்முறைகளால் நைகரின் ஆறு கிறிஸ்த்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அத்துடன் குறைந்தபட்சம் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது