Breaking News

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகளுக்கு சீல்!

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுரையின் பேரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள ஐந்து அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 கூட்டுத்தாபனத்திலுள்ள முக்கிய ஆவணங்களை சிலர் கொண்டு செல்ல முற்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் மூவரின் அறைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளன.