ஜனாதிபதியின் கட்அவுட்கள், பேனர்களை அகற்றுமாறு உத்தரவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடஅவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல பேனர்கள் மற்றும் கட்அவுட்களையும் உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தமது உருவப்படம் பொறித்த கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேவையற்ற வகையில் பேனர்கள் கட்அவுட்களை காட்சிப்படுத்த பொதுமக்கள் பணத்தை விரயமாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.








