Breaking News

இன்று பதவிப்பிரமாணம் செய்கிறார் மைத்திரி (2ம்இணைப்பு)

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.


இன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இந்த தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.


இன்று பதவிப்பிரமாணம் செய்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   ,இதுவரை வெளியிடப்பட்ட உத்தியோகப் பற்றற்ற ரீதியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளார்.