Breaking News

யாரும் யாரையும் பழிவாங்கக் கூடாது - ரணில்

யாரும் யாரையும் பழிவாங்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொது மக்களிடம் கோரியுள்ளார். 


எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திபபில் பங்கேற்ற போது ரணில் விக்ரமசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.போரை வென்றெடுத்த ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவை மதிக்கின்றோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் மா அதிபர் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

தற்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றியீட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தேன். ஜனாதிபதி பொறுப்பினை ஒப்படைப்பதாக அவர் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக்கொண்டு வந்த ஜனாதிபதி என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிப்பார். மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருந்தனர். நல்லாட்சியை ஏற்படுத்த ஜனநாயகத்தை நிலைநாட்ட மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது.

எவரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. யாரையும் யாரும் பழிவாங்க இடமளிக்க முடியாது. 100 வீதம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோருகின்றோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.