புதிய ஜனாதிபதி மீது இந்தியா நம்பிக்கை -சையத் அக்பருதீன்
இலங்கையின் புதிய ஜனாதிபதியின் விஜயத்தை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள இந்தியா, இலங்கையின் சகல மக்களினதும் கருத்துக்களை அவர் செவிமடுப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் நிகழும் வலுவான பாரம்பரியத்தை இலங்கை கொண்டுள்ளது. ஜனநாய நடைமுறைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கையின் புதிய ஜனாதிபதியை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியும், தான் கூடிய விரைவில் இந்தியாவுக்கு வருவார் என்று உறுதியளித்துள்ளார். இலங்கையுடன் நட்புறவை பேணும் அதேசமயம், அந்த நாட்டில் சமாதானமும்,ஸ்திரத்தன்மையும் நிலவுவதை இந்தியா விரும்புகிறது .- என அவர் குறிப்பிட்டுள்ளார்.







