பாப்பரசர் வருகையின்போது விசேட பாதுகாப்பு
இலங்கைக்கு நாளை செவ்வாயக்கிழமை 13ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசரின் விஜயத்தையொட்டி விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாளை 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். அன்றையதினமே இலங்கை ஆயர்களை கொழும்பில் பேராயர் இல்லத்தில் சந்திப்பார்.
மாலை 5 மணிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுவார். ஆதனை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு இலங்கையில் உள்ள சர்வமதத்தின் தலைவர்களை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சந்திப்பார். மறுநாள் புதன்கிழமை, பிற்பகல் பாப்பரசர் மடுத்திருத்தலத்துக்கு செல்லார். மடுத் திருதலத்தில் 3.30 மணி தொடக்கம் 4.30 மணிவரை மாதா புகழ்ச்சி வழிபாட்டில் பங்கு கொண்டு மக்களுக்கு இறை ஆசி வழங்குவார்.
இதன்போது சிறுவர் சிறுமிகள், இளைஞர் யுவதிகள், குருக்கள்,அருட்சகோதரிகள்,கத்தோலிக்க மக்கள்,கத்தோலிக்கர் அல்லாத மக்களையும் போரினால் உடல் நலம் குன்றிய மக்களையும் சந்தித்து தமது உடனிருப்பையும் இறை கரிசனையையும் பாப்பரசர் வெளிப்படுத்துவார். அத்துடன், பாப்பரசர் நாளை மறுதினம் 14ஆம் திகதி புதன்கிழமை அருளாளர் ஜோசவ் வாஸ் அடிகளாரை புனித நிலைக்கு உயர்த்தும் புனித திருப்பலியை இலங்கையில் உள்ள அனைத்து ஆயர்களும் கத்தோலிக்க மக்களுடன் இணைந்து காலி முகத்திடலில் ஒப்புக்கொடுக்கவுள்ளார்.
பாப்பரசரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு பணிகளில் 26 ஆயிரம் பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மடு பிரதேசத்தில் 3ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








