Breaking News

பொய் கூறும் மகிந்த! கண்டுபிடித்தார் பொலிஸ் பேச்சாளர்

தங்காலையில் உள்ள தமது வீடு சோதனையிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொய் கூறியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறுவது போன்று தங்காலையில் உள்ள அவரது வீடு சோதனையிடப்படவில்லையெனவும் வீரக்கெட்டியவில் அமைந்துள்ள கார்ல்டன் இடமே சோதனையிடப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சிறியரக விமானம் மற்றும் லம்போகினி கார் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.