இலங்கையை புரட்டி எடுத்த நியூசிலாந்து
சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியுசிலாந்து அணி 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியுசிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி சார்பில் லூக் ரொஞ்சி 170 ஓட்டங்களையும் கிராண்ட் எலியட் 104 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 360 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 361 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்கள் நிறைவில் 252 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கையணி சார்பாக அதிரடியாக ஆடிய டில்ஷான் 106 பந்துகளுக்கு முகம் கொடுத்து 17 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டங்கள் ஆட்டங்களாக 116 ஓட்டங்களை பெற்றார்.
போட்டியின் ஆட்டநாயகனாக 99 பந்துகளுக்கு முகம் கொடுத்து 14 நான்கு ஓட்டங்கள் 9 ஆறு ஓட்டங்கள் ஆட்டங்களாக 116 170 ஓட்டங்களை பெற்ற நியுசிலாந்து அணியின் லூக் ரொஞ்சி தெரிவுசெய்யப்பட்டுளார்.








