Breaking News

பிரகீத்தை கடத்தி வைத்திருப்பவர் ராஜபக்‌ஷவே! – மனைவி சந்தியா (காணொலி)

லங்கா இ நியூஸ் செய்தி இணையத்தின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார்.


இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு கோரி சத்தியாகிரமொன்றை நடத்தினார். இதில் 50இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே சந்தியா எக்னலிகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.