மகிந்த படித்த பாடசாலையில் தான் ஹெட் மாஸ்டராம் - மைத்திரி
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மைத்ரிபால சிறிசேனாவின் இறுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மேல் மாகாணசபை உறுப்பினறும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார் மக்கள் நம்மோடு உள்ளனர் ஆனால் தற்போதைய ஜனாதிபதி எதாவது ஜில்மாட் செய்ய வாய்ப்பு உள்ளதா? என பொது வேட்பாளரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள மைத்திரிபால "ஒரு ஜில்மாட்டும் செய்ய முடியாது. மகிந்த சென்ற பாடசாலையில் நான் தான் ஹெட்மாஸ்டர் அது அவருக்கு நன்கு தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.








