Breaking News

வலி.வடக்கில் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படும் - சுவாமிநாதன்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இதுவரை பொதுமக்களுக்கு விடுவிக்கப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனிடம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருடன், அமைச்சர் சுவாமிநாதன் நேற்று கலந்துரையாடினார்.

இந்த மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இதனை செய்து முடிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.