Breaking News

எல்லோரும் சேர்ந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள் தானே! புலம்பும் மஹிந்த

மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு அண்மையில் அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பு வந்தது

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு கிழமைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்தது.இதன்போது தொலைபேசியின் அடுத்த பக்கத்தில் பேசியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆவார்.

எனினும் கோபமில்லாத தொணியில் பேசிய மஹிந்த ராஜபக்ச, “ஒயாலா ஒக்கோம எக்கத்துவெலா மாவ பரத்துவா நெத்த”? ( நீங்கள் எல்லோரும் இணைந்து என்னை தோற்கடித்து வீட்டீர்கள்தானே? என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.எனினும் அதற்கு பதிலளித்த ரணவக்க, ஏற்கனவே உங்களுடன் பேசி முடியாத நிலையிலேயே பொதுவேட்பாளரை தமது கட்சி ஆதரித்ததாக குறிப்பிட்டார்

இதன்போது சம்பிக்க ரணவக்கவின் புதிய அமைச்சுப்பொறுப்புக்காக மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார்.