Breaking News

அஜித்-சிவா கூட்டணியில் புதிய படம்

அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரமாத்து பின்புலத்தில் நடித்து கலக்கிய படம் வீரம்.


இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். தற்போது அஜித், கௌதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றன.

இப்படம் பொங்கல் முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அஜித்துடன், சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘வீரம்’ படத்தை கிராமத்துப் பின்னணியில் கொடுத்த சிவா தனது அடுத்தப் படத்தை நகரத்தில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் படமாக இயக்கப்போகிறாராம்.

இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குனர் சிவா இயக்கிய ‘சிறுத்தை’, ‘வீரம்’ இரண்டிலுமே தமன்னாதான் ஹீரோயின் என்பதால் அஜித் ஜோடியாக தமன்னாதான் நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தமன்னா வெளியேறி, இப்போது சமந்தா நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் சமந்தாவும் ‘அஜித்’வுடன் நடிக்க ‘டபுள் ஓகே’ சொல்லிவிட்டதாகக் கேள்வி.