தமிழர் விடயத்தில் நல்லிணக்கம் வேண்டும் - இந்தியா வலியுறுத்து
இலங்கை தமிழர் விடயத்தில் நல்லிணக்கம் வேண்டும் என்ற காரணத்தை இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், மற்றும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை போன்ற விடயங்களும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளன. இதேவேளை சுஸ்மா விரைவில் இலங்கைக்கும் அதேநேரம் சீனாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.








