Breaking News

காரசாரமான கேள்விகளும் பதில்களும் -காணொளி இணைப்பு


சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா
அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா? இறுதி நேரத்தில் மகிந்த என்ன திட்டமிட்டார்? 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா? போன்ற காரசாரமான கேள்விகளும் பிரதமர் ரணில்,முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா, வெளிவிவகாரஅமைச்சர் மங்கள, த.தே.கூ.தலைவர் சம்பந்தன், மகிந்தவின் புதல்வர் நாமல்,துரோகி கருணா போன்றவர்கள் இந்தியாவின் என்.டி.ரீ.வி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியை நேயர்களுக்காக இணைத்துள்ளோம்.

சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமா? என ரணிலிடம் கேட்கப்பட்டது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து செயற்படும். ஆனால் சர்வதேச சட்டங்களின் கீழ் சிறிலங்காவிற்குள் யாரையும் தண்டிக்க இடமளிக்கப்படமாட்டாது என்று அவர் கூறியுள்ளார்.
குற்றவாளிகள் உள்நாட்டு சட்டத்திட்டங்களின் அடிப்படையிலேயே கையாளப்படுவார்கள் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.