அரசியலிருந்து விலக மாட்டேன்- மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவென தொடர்ந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு சபாநாயகர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.








