விரைவில் தகவல் அறியும் சட்டம் மூலம் - கயந்த கருணாதிலக்க
தகவல் அறியும் சட்டமூலத்தை 100 நாட்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரச ஊடகங்கள் மிகவும் மோசமான முறையில் செயற்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் பாரதுரமானவை, அரச ஊடகங்களை மக்களுடன் மிக நெருங்கச் செய்யும் ஊடகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அவமானப்படுத்தப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அத்துடன் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.








