Breaking News

போதைப்பொருள் மன்னன் வெலேசுதா குறித்து 'திடுக்' தகவல்கள்

பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ள முக்கிய போதைபொருள் கடத்தல்காரனான வெலசுத, தான் முன்னைய அரசாங்கத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா பணத்தை வழங்கிவந்தார் என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 


வெலசுதா தனது நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்தார் என்பது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது அவரிடம் தீவிர விசாரணகைளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த இரண்டு வருடகாலத்தில் தான் சில மூத்த பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கொள்கலன்களில் போதைபொருளை இலங்கைக்கு அனுப்பினார் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு உதவினார் என்றும், கொழும்பிலும் ஏனைய பல பகுதிகளுக்கும் அவற்றை விற்பனை செய்வதற்கும் கூட அவர் உதவினார் என்றும் வெலசுதா தெரிவித்துள்ளார் .
என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேவேளை இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதை அறிந்துள்ள குறிப்பிட்ட அரசியல்வாதி தனக்குள்ள அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க முயன்று வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலசுதாவிடமிருந்து நிதியைப் பெற்ற நாட்டின் முக்கிய புள்ளிகள் குறித்த விவரங்களும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் உள்ளன எனத் தெரியவருகின்றது. 

மேலும் போதைபொருள் கடத்தல் நடவடிக்கைகளில் சுதாவின் மனைவி தொடர்புபட்டுள்ளாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர். வெல சுதாவிற்கு எதிராக இலங்கை நீதிமன்றங்களில் பல முக்கிய வழக்குகள் காணப்பட்ட நிலையில், அவர் முக்கிய பொலிஸ் அதிகாரியின் உதவியுடனேயே நாட்டிலிருந்து தப்பியோடினார் என்றும் தெரியவருகின்றது.