யாழ். யூனியன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி மாணவர்கள் இன்று சுன்னாகம் கழிவு நீர் பிரச்சனையை உடன் முடிக்கக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனா்.
அண்மைக் காலமாக யாழில் சுன்னாகம் கழிவு நீர் சுன்னாகம் தவிர்ந்த ஏனைய பிரதேசஙக்ளிலும் பரவி வருகின்றது. இதனை கண்டித்து இதற்கான உரிய தீர்வினை பெற்றுக் கொள்ளும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டத்தை மாணவா்கள் முன்னெடுத்தனா் .இதனை தடுத்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி யாழில் பல தரப்பினரும் பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







