அரசியல் பழிவாங்கல்களை என்னிடமும், தந்தையிடமும் செய்யுங்கள் - நாமல்
அரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனது தாயார் எந்தவொரு ஊழல் மோடிகளிலும் ஈடுபட்டதில்லை.முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி ராஜபக்ச எந்தவிதமான தங்க மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை.
திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன்.எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரில் நானும் தந்தையும் மட்டுமெ அரசியலில் ஈடுபட்டோம்.எனது தாயாரும் இரண்டு சகோதரர்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.எவருக்கேனும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என்னையும் எனது தந்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எனது தாய் எந்தவொரு மோசடியிலும் ஈடுபடவில்லைää உண்மையான விபரங்கள் வெளியிடப்படும் என நம்புகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தங்க மோசடி குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகங்களுக்கு நேற்று விளக்கமளித்த போது நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.







