Breaking News

தலைமைப் பதவியை மைத்திரியிடம் ஒப்படைக்கத் தயாராம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 


நேற்று புதன்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் கட்சியை பாதுகாப்பதற்காகவே மஹிந்த ராஜபக்‌ஷ இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் கட்சியின் சில உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து கட்சி பிளவுபடலாம் என அவர் அச்சம் கொண்டுள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்வில போன்றவர்கள் அதனை எதிர்த்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.