மடு தேவாலயத்தில் பாப்பரசர்
புனித பாப்பரசர் அருட்தந்தை பிரான்சிஸின் உலங்கு வானூர்தி மூலம் வடக்கின் மடு தேவாலயத்திற்கு தற்போது வருகைதந்துள்ள நிலையில் விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளது.
பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், சி,வி,விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கூடியுள்ளனர். இதேவேளை மடு தேவாலயத்தை சூழ பொலிசார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








