Breaking News

தொடர்ந்தும் வீழ்த்தப்படும் மகிந்தர் அணியின் விக்கெட்டுகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளனர்.


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற இவர்கள் ஜனாதிபதி மைத்திபாலவுடன் இணைந்து செயற்படவுள்ளதுடன். தங்களது ஆதரவை வழங்கவுள்ளதாகவும்  குறிப்பிட்டனர்.சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சஜித் வாஸ் குணவர்த்தன, டியு குணசேகர, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உதித் லொக்குபண்டார ஆகியோரே தற்போது மைத்திரிபால அரசுடன் இணைந்துள்ளனர்.