Breaking News

செந்தில் தொண்டமான் பண்டாரவளை நீதிமன்றத்தில் சரண் (2ம் இணைப்பு)


ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்  பண்டாரவளை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.


செந்தில் தொண்டமான் தலைமறைவு

செந்தில் தொண்டமான் தலைமறைவாக இருக்கிறார் இதனாலேயே அவரைக் கைது செய்ய முடியவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். 

ஆனால் செந்தில் தொண்டமான் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் விதத்திலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பேச்சாளர் கூறினார். நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் செந்தில் தொண்டமானுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. 

இதையடுத்து அவர் தனது சொந்த இடத்தில் இருந்து தலைமறைவானார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் செந்தில் தொண்டமான் நாட்டிலிருந்து தப்பித்து வெளிநாடு செல்ல முயன்றால் விமான நிலையத்தில் வைத்து உடன் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்