சனத்தைக் கடந்தார் சங்கா (முழுமையான விபரம் இணைப்பு)
நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 76 ஓட்டங்களைப் பெற்ற குமார் சங்கக்கார ஒருநாள் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர்களின் வரிசையில் சனத்தைப் பின் தள்ளி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதனடிப்படையில் இலங்கை அணி சார்பாக முதலிடத்தில் உள்ளார். இவருக்கு முன்னர் சச்சின் மற்றும் பொண்டிங் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
394 போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்கார மொத்தமாக 13490 ஓட்டங்களை குவித்துள்ளார்.
விபரம் வருமாறு:
குமார் சங்கக்கார – 13490(394 போட்டிகள்)
சனத் ஜயசூரியா – 13430(445 போட்டிகள்)
மஹேல ஜெயவர்த்தன – 12472 (438 போட்டிகள்)
அரவிந்தடி சில்வா – 9284 (308 போட்டிகள்)
டில்சான் – 9183(304 போட்டிகள்)
சர்வதேச ரீதியில் ஓட்ட விபரம் வருமாறு
சச்சின் டெண்டுல்கர் – 18426 (463 போட்டிகள்)
பொண்டிங் – 13704 (375 போட்டிகள்)
குமார் சங்கக்கார – 13490(394 போட்டிகள்)
சனத் ஜயசூரியா – 13430(445 போட்டிகள்)
மஹேல ஜெயவர்த்தன – 12472 (438 போட்டிகள்)








