Breaking News

வடக்கிற்கு புதிய ஆளுநர்! வரவேற்கிறது கூட்டமைப்பு

வடக்கு ஆளுநராக புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.    


எச்.எம்.ஜி.எஸ் . பளிஹக்கார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.    இது தொடர்பிலான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநராக இதுவரை ஜீ.ஏ சந்திரசிறி  பதவி வகித்தார். அவருக்குப் பதிலாகவே பளிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.    இவர் வெளிவிவகார அமைச்சின் அமைச்சின் முன்னாள் செயலாளராவார். 

அத்துடன் ஐ.நாவுக்கான வதிவிடப்பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.    எனவே சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அத்துடன் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.