மன்னாரில் எண்ணெய் பெற நடவடிக்கை - சம்பிக்க
மன்னார் கடற்பரப்பில் உள்ள எண்ணெய் வளத்தை துரிதமாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று தமது கடமைகளை பொறுப்பேற்ற மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.மன்னாரில் கடற்பரப்பில் இருந்து எண்ணெயை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இப்போதே தாமதமடைந்துள்ளன.
இந்த நிலையில் இதனை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும்.இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.








