ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைமையை உடனடியாக விட்டுக்கொடுத்தமை தவறு - வாசுதேவ
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு உடனடியாக விட்டுக் கொடுத்தமை பாரிய தவறாகும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது எனவும், இது அரசியல் ரீதியான தவறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக அவசர அவசரமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன் பிரதமர் ஒருவரையும் நியமித்தமை வழமைக்கு மாறானது. அத்துடன் கட்சியின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விட்டுக் கொடுத்தமையினால் தங்களுக்காக வாக்களித்த பெரும் எண்ணிக்கையிலான கட்சி அதரவாளர்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.








