Breaking News

இலங்கையை புரட்டி எடுத்த நியுசிலாந்து

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியுசிலாந்து அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


 நியுசிலாந்தின் நெல்சன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி 49.3 ஓவர்களில் 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 

இலங்கையணி சார்பாக மஹேல ஜெயவர்த்தன 94 ஓட்டங்களையும், குமார் சங்ககார 76 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து 48.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டினை இழந்து 280 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நியுசிலாந்து அணி சார்பாக வில்லியம்சன் 1௦3 ஓட்டங்களைபெற்று ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டுளார். 

மேலும் முன்னதாக சனாத் ஜயசூரிய 13 ஆயிரத்து 430 ஓட்டங்களை பெற்இதன் மூலம் இலங்கை அணி வீரர் ஒருவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்டு அதிகூடிய ஓட்டங்கள் என்ற மைல்கல்லை குமார் சங்ககார கடந்தார். இன்று பெற்றுக்கொண்டு 76 ஓட்டங்களுடன் 13 ஆயிரத்து 490 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.