Breaking News

''நான்தான் பிரதமர்'' மொட்டை மாடியிலேறி புலம்பும் மகிந்த(காணொளி)


நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின்
தலைவரான நான் இப்போது வெளியே இருக்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாத ஒருவர் இப்போது பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.

இப்படி மனம் புழுங்குகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. நேற்று தனது தங்காலை 'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில், வீட்டின் மேற் தளத்திலிருந்து அழுது புலம்பியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள தமது இல்லத்திலிருந்து தங்காலை வீட்டுக்கு காரில் சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவை வழி எங்கும் மக்கள் வெள்ளம் சூழ்ந்து நின்று வரவேற்றது. தங்காலை இல்லத்தில் தம்மைத் தேடிவந்து சந்தித்த பௌத்த குருமார் மற்றும் பொது மக்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தினார். அதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.


அப்போது அவர் கூறியவை வருமாறு:-

நாடு ஒரு மாற்றத்தை வேண்டுகிறது என்று கூறினார்கள். அதற்குத் தானே நீங்கள் வாக்களித்துள்ளீர்கள்! அதைத்தான் கொடுத்தீர்கள். ஆகவே இப்போது மாற்றம் வந்துள்ளது. ஆட்சியை விட்டுப் போனாலும் நான் கட்சியை விட்டுப் போகமாட்டேன். நான் நாட்டைவிட்டு ஓடிவிடுவேன், ஆகவே விமானத் தளத்தை மூடவேண்டும், காவல் போடவேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்தார்கள். நான் நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன். இங்குதான் இருப்போன். நான் எனது நாட்டையும் எனது மக்களையும் நேசிக்கிறேன்.


ஆகவே இதுதான் எனக்கு புகலிடம். வேறு எங்கும் செல்லமாட்டேன். உங்களுக்குத் தெரியும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவர்தான் பிரதமராகவேண்டும். நாடாளுமன்றத்தில் 128 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியின் தலைவன் நான்தான். நான் இன்று வெளியே இருக்கிறேன். ஆனால் அறுதிப் பெரும்பான்மை பெற்றிராத கட்சியின் தலைவர் பிரதமராகியுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பந்தை மற்றவர்கள் பக்கத்தில் (களத்தில்) தட்டி விட்டு விட்டு நின்று வேடிக்கை பார்ப்பதும் விமர்சிப்பதும் பேசுவதும் கஷ்டமான காரியமல்ல என்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.