அமெரிக்க ராணுவத்தின் சமூகத்தளங்கள் ஊடுருவல்
அமெரிக்க ராணுவத் தரப்பினரின் டுவிட்டர் மற்றும் யு டியுப் கணக்குகள் சில மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் குறித்த கணக்குகளில் ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க ராணுவ வீரர்களே நாங்கள் உங்களை பின்தொடர்ந்து வந்து கண்காணிக்கிறோம்' என அமெரிக்க ராணுவ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்று இடப்பட்டிருந்தது,
குறித்த பதிவு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்ததை அடுத்து குறித்த கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.எனினும். இந்த சம்பவம் இணையத்தள நாசகாச செயற்பாடே அன்றி பாரிய அளவில் அத்துமீறு தரவுகள் களவாடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.








