நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபால டி சில்வா
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நியமிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னாள் அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் கூற்றுப்படி, இந்த நியமனத்துக்கு கட்சிக்குள் அதிக ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் பாப்பரசரின் விஜயம் முடிந்தவுடன் இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே சிரேஸ்ட நிலை என்ற அடிப்படையில் ஜோன் செனவிரட்னவின் பெயரும் இந்த பதவிக்காக பிரேகரிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்து அவரை எதிர்க்கட்சி தலைவராக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.எனினும் நிமல் சிறிபால டி சில்வாவே பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவராவார் என்று முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.








