பசில், நாமல், கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டவர்களுக்கு எதிராக கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே வி பியின் தலைவர் அனுரகுமார் திஸாநாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இதேவேளைஆளும் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஆயத்த பணிகளுக்கு தாம் பங்குகொள்ளும் விதம் குறித்தும் இதன் போது அவர் தெரிவுப்படுத்தினார்.








