ஆஸ்கர் வாய்ப்பை தவற விட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
தனது இசையால் உலகளவில் பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மான் தி ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற பிப்ரவரி 22ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் சிறந்த இசையமைபாளருக்கான விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தி ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம் என்ற ஹாலிவுட் படமும், ரஜினியின் கோச்சடையான் படங்கள் தேர்வாகி இருந்தன.
இதனிடையே விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மீண்டும் ஆஸ்கர் விருது பெறும் வாய்ப்பை ரஹ்மான் இழந்துள்ளார்.
இதுகுறித்து ரஹ்மான் கூறியதாவது “விருது மீது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் நீண்ட பயணத்தில் இது ஒரு நிறுத்தம் என்று நினைக்கிறேன். கடவுள் என்னிடம் அன்பாக உள்ளார்” என்றார்.








